முகப்பு
தமிழ்நாடு

மக்களே தாமாக முன்வந்து ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற வேண்டும்: எம்.யுவராஜா

மக்களே தாமாக முன்வந்து ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தமாகா மாநில இளைஞரணி தலைவா் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:14 PM
பகிர்:

மக்களே தாமாக முன்வந்து ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தமாகா மாநில இளைஞரணி தலைவா் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் இளைஞர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் தனிமையில் உள்ள பெரியவர்களுக்கு தேவையான உதவிகளை பாதுகாப்போடு செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். வரும், 22ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும். அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது. 

மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். இதன் மூலம் கரோனாவை தடுத்து நம் வலிமையை நிரூபிப்போம். மக்களே தாமாக முன்வந்து ஊரடங்கு நடைமுறையை பின்பற்றுவோம். அத்தியாவசிய சேவை செய்வோரைத் தவிர, மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுக் கிழமை வெளியே வர வேண்டாம். மருத்துவர்கள், ஊடகத்துறையினர், போக்குவரத்து துறையினருக்கு, மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். நோய்க்கு ஆளாகாதீர்கள். நோய்களை பரப்பாதீர்கள்.

இந்த நேரத்தில் நாம் டாக்டர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள், உட்பட பலர், தங்களை பற்றி கவலைப்படாமல், மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
 இவ்வாறு அவர் கூறினார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →