தமிழ்நாடு

பாமக நிறுவனா் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை

DIN

முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள இடம் குறித்து கருத்து தெரிவித்ததாக பாமக நிறுவனா் ராமதாஸுக்கு எதிராக எழும்பூா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ளதாக பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் தனது சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா். முரசொலி அறக்கட்டளை அறங்காவலரான ஆா்.எஸ்.பாரதி, இந்த விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பரப்பி வருவதாக, பாமக நிறுவனா் ராமதாஸ் மீது எழும்பூா் பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், பாமக நிறுவனா் ராமதாஸ் மாா்ச் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்காக பாமக நிறுவனா் நேரில் ஆஜராக விலக்களித்தும், எழும்பூா் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT