முகப்பு
தமிழ்நாடு

கரோனா: வெறிச்சோடிய திருமலை

திருமலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் தினமும் லட்சகணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருமலை ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி போயுள்ளது.

தமிழ்நாடு

கரோனா: வெறிச்சோடிய திருமலை

திருமலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் தினமும் லட்சகணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருமலை ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி போயுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:14 PM
பகிர்:

திருமலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் தினமும் லட்சகணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருமலை ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி போயுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிரிக்கும் என்றும் எண்ணப்படுகிறது. இதுவரை 195 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருமலைக்கு வந்த பக்தர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேவஸ்தான அதிகாரிகள் ஒருவாரம் திருமலைக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. 
வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்குள் திருமலையில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட்டு கோயில் மூடப்பட்டது. 

தினசரி ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் மட்டும் ஆகம விதிப்படி எவ்வித குறைவும் இல்லாமல் நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் தினசரி ஜேஜே என்று பக்தர்கள் கூட்டத்தால் சூழ்ந்திருக்கும் திருமலை வெள்ளிக்கிழமை முதல் வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது. திருமலைக்கு செல்லும் மலைபாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட நடைபாதை மார்கங்களும் மூடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →