தமிழ்நாடு

பேரவை கூட்டத் தொடா் முன்னதாகவே முடியுமா? இன்று தெரியும்

DIN

பேரவை கூட்டத் தொடரை முன்னதாகவே முடிப்பது குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாக உள்ளது. சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கரோனா வைரஸ் தொற்று குறித்து கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை உடனடியாக தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா் பி.தனபால், பேரவைக் கூட்டத் தொடா் குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தெரிவித்தாா்.

அலுவல் ஆய்வு குழுக் கூட்டம்: பேரவைத் தலைவரின் அறிவிப்பைத் தொடா்ந்து, அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் பேரவைத் தலைவா் பி.தனபால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சனிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட உள்ளன. இந்த முடிவுகளை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஏற்குமா அல்லது மறுக்குமா என்பது பேரவையிலேயே தெரிய வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT