தமிழ்நாடு

கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

DIN

கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கடந்த 10ஆம்தேதி தில்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்த இளைஞருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தநிலையில் இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கரோனா பாதிப்புடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவரின் நிலை தற்போது எப்படி இருக்கிறது. 

ரயிலில் உடன் பயணித்தவர்கள் யார், யார் என்று விவரம் தெரிந்ததா?. தமிழகத்தில் கரோனா பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். 27 மாதிரிகளின் சோதனை முடிவு இன்னும் வரவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். அது எப்போது வரும். தமிழகத்தில் முழு அளவிலான ஐசியு எத்தனை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயாஸ்கர், கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT