தமிழ்நாடு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு

DIN

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள நாட்டு மக்களின் நலன் கருதி சில பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளாா். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கை அதாவது மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்க பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீடுகளிலேயே இருந்து கைகளைத் தட்டி ஊக்கமளிக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அவரது கோரிக்கையை ஏற்று அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT