தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: தமிழக அரசு 

DIN

சுய ஊரடங்கை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பிரதமா் நரேந்திர மோடி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தாா். 

மேலும், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தினாா். அவரது கோரிக்கையை ஏற்று அன்றைய தினம் தமிழகத்தில் நாள் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இத்தகவலை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழத்தில் நாளை அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT