தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஊரடங்கு தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசியப் பணிகளைத் தொடர தடையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.