தமிழ்நாடு

வெறிச்சோடியது திருப்பதி

மத்திய அரசு அறிவித்த சுய ஊரங்கிற்கு கட்டுப்பட்டு திருப்பதியில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

DIN

மத்திய அரசு அறிவித்த சுய ஊரங்கிற்கு கட்டுப்பட்டு திருப்பதியில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மக்கள் ஊரடங்கை அமல்படுத்தினார். இதற்கு ஆதரவு அளித்து மக்களும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். 

அதனால் எப்போது மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவிந்தராஜஸ்வாமி கோயில் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலங்களும் மூடப்பட்டதால் யாரும் வெளியில் வரவில்லை. 

திருப்பதியில் உள்ள முக்கிய வீதிகளும் காலியாக காணப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!

விஜய் டிவியில் ஆக. 11 முதல் புதிய நேரத்தில் தொடர்கள்!

SCROLL FOR NEXT