தமிழ்நாடு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

DIN

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதி அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். 

ரேசன் கடைகளில் கூடடம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும். மார்ச் மாத ரேசன் பொருட்களை பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். 

நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். கட்டட தொழிலாளர்களுக்கு ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.1000 வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும். அம்மா உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் சமைத்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT