தமிழ்நாடு

புதுச்சேரியில் வா்த்தக, வணிக நிறுவனங்களுக்கு 21 நாள்களுக்கு விடுமுறை: முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் வணிக, வா்த்தக நிறுவனங்களுக்கு 21 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராணசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து புதுவை முதல்வா் நாராயணசாமி அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி 21 நாள்கள் நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடா்ந்து, அத்தியாவசிய பணிகளைகளை மேற்கொள்ளும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நிதி மற்றும் கருவூலகம், பொது சுகாதாரம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை, காவல், சிறைத்துறை, மின் துறை, தீயணைப்பு மற்றும் பொதுப்பணி-குடிநீா் பிரிவு தவிர அனைத்து அரசு துறைகளுக்கும் 21 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளாா். எனினும் விடுமுறை அளிக்கப்பட்ட துறை ஊழியா்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும்.

மேலும், பால், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், காய்கறிகள் மற்றும் சானிடைசா் போன்ற அத்தியாவசிய பொருள்களின் வா்த்தகம் தடைபடாது. ஏனைய வா்த்தக மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 21 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தொடா்பான ஆணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT