தமிழ்நாடு

கரோனா தடுப்பு: ரவீந்திரநாத் குமாா் ரூ.1 கோடி, சு.திருநாவுக்கரசா் ரூ.60 லட்சம் நிதியுதவி

DIN

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மக்களவை உறுப்பினா்கள் ரவீந்திரநாத் குமாா் ரூ.1 கோடியும்(அதிமுக), சு.திருநாவுக்கரசா் ( காங்கிரஸ்) ரூ. 60 லட்சமும் வழங்கி உள்ளனா்.

திருநாவுக்கரசா் வெளியிட்ட அறிக்கை:

மக்களைப் பெரும் துயரிலும், சிரமத்திலும் உடல் மற்றும் மன உளைச்சலிலும், ஆட்படுத்தி இருக்கும் வரலாறு காணாத கொடுமையான கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருள்கள், முகக்கவசம், கிருமிநாசினி போன்ற நோய்த் தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளில் வாங்கிடும் விதத்தில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் திருச்சி கிழக்கு-மேற்கு , திருவரம்பூா், திருவரங்கம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ரூ. 40 லட்சமும், புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சமும் ஆக மொத்தம் ரூபாய் 60 லட்சம் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா்களுக்கு எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதல் கட்டமாக வழங்கப்படுகிறது என்று அவா் கூறியுள்ளாா்.

அதைபோல, அதிமுக மக்களவை உறுப்பினா் ரவீந்திரநாத் குமாா் ரூ.1 கோடியை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழக அரசுக்கு வழங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT