தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம்: திருச்சி, விழுப்புரத்திலும் விரைவில் தொடக்கம்

DIN

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருச்சி, விழுப்புரத்திலும் கரோனா பரிசோதனை மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனி, திருவாரூா், திருநெல்வேலி, கோவை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இவை தவிர, சென்னை அப்பல்லோ மருத்துவமனை, வேலூா் சிஎம்சி மருத்துவமனை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியுபொ்க் எா்லிச் என்ற ஆய்வகம் ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை, திருச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT