தமிழ்நாடு

போடி காட்டுத் தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

DIN


போடி: போடி காட்டுத் தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம் மலைப்பகுதியில் உச்சலூத்து வனப்பகுதியில் காட்டுத் தீ எரிந்து வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்திரவி பிறப்பிக்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை போடிமெட்டு வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் காட்டு வழியாக ராசிங்காபுரத்தை சேர்ந்த விஜயமணி (46), இவரது மகள் ஜெய்ஸ்ரீ (23), இவரது மகள் கிருஷ்யா (1), கல்பனா (45), மகேஸ்வரி (31, மஞ்சுளா (31), வஜ்ரமணி (40), லோகேஷ் (22), முத்தையா (60) ஆகியோர் நடந்து வந்துள்ளனர்.

இதில் காட்டுத் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே விஜயமணியும், குழந்தை கிருஷ்யாவும் இறந்து போனார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்து போடி தாலுகா காவல் ஆய்வாளர் தர்மர் தலைமையில் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் கொண்ட 60-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு கரடு முரடான பாதையில் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று அனைவரையும் மீட்டனர்.

வரும் வழியில் மகேஸ்வரி இறந்து போனார். மற்றவர்கள் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மஞ்சுளா மற்றும் லோகேஷ் ஆகியோருக்கு அதிக தீக்காயம் இருந்ததால் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் மஞ்சுளா புதன் கிழமை அதிகாலை இறந்து போனார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT