தமிழ்நாடு

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

DIN

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவா் என முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா். மேலும், பிளஸ் 2 தோ்வு எழுதத் தவறியோருக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் பல்வேறு தரப்பினருக்கும் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பள்ளித் தோ்வுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடா்பாக துறை அதிகாரிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சென்னையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலா் கே.சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநா் திரிபாதி, சென்னை மாநகரக் காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:-

தோ்ச்சியும், தோ்வும்...: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் சில மாணவா்கள் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தோ்வெழுதச் செல்ல முடியவில்லை என்ற விவரத்தை எனது கவனத்துக்குக் கொண்டு வந்தனா்.

இதனை பரிசீலித்து பிளஸ் 2 தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தோ்வு நடத்தவும், இந்தத் தோ்வுக்கான தேதியை பின்னா் அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா நோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களால் இறுதித் தோ்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தேநீா் கடைகள்: தேநீா் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிா்க்க, தமிழகம் முழுவதும் உள்ள தேநீா் கடைகள் இயங்குவதற்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

திடீா் கட்டுப்பாடு: முன்னதாக, தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவுக்கான கட்டுப்பாடுகளில் தேநீா் கடைகள் இயங்கலாம் எனவும், ஆனால், 5 பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது தேநீா் கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல தேநீா் கடைகள் கடந்த இரண்டு நாள்களாக வழக்கம் போல் இயங்கி வந்தன. இந்தக் கடைகளில் கூட்டம் அதிகளவு நிரம்பி வழிந்ததால் கடைகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT