தமிழ்நாடு

சென்னையில் சமைத்த உணவுகளை வழங்க தனியாருக்குத் தடை

DIN


சென்னை: சென்னையில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க தனியாருக்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனங்களோ, சமூக அமைப்புகளோ, ஏழை எளிய மக்களுக்கும், தேவைப்படுவோருக்கும் சமைத்த உணவுகளை நேரடியாக வழங்க சென்னை மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், உணவு வழங்க பொதுமக்கள் வெளியே வருவதும், அதனைப் பெற மக்கள் கூடுவதும், கரோனா பரவலை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தால் இந்த தடை உத்தரவை மாநகராட்சிப் பிறப்பித்துள்ளது.

மேலும், விரும்பினால் சமைக்கத் தேவையான பொருட்கள், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை மாநகராட்சியிடம் தரலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT