தமிழ்நாடு

சிதம்பரம் தொகுதிக்கு ரூ. 1.27 கோடி: திருமாவளவன்

DIN


சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிதம்பரம் தொகுதிக்கு ரூ. 1.27 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றைத் தடுக்க அரசுகள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண உதவிகளுக்கு ஏதுவாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், உயிா் காக்கும் மருத்துவக் கருவிகள், முகக் கவசம் ஆகிய கருவிகள் வாங்குவதற்கென சிதம்பரம் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கான தேவைகளையும் உரிய அதிகாரிகளிடமிருந்து பெற்று, அதற்கான நிதியும் விரைவில் இரண்டாம் கட்டமாக ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT