தமிழ்நாடு

அப்பல்லோ மருத்துவமனைகளில் 250 படுக்கைகளுடன் கரோனா வாா்டு

DIN


சென்னை: நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் 250 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா வாா்டுகள் தொடங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக அந்த மருத்துவமனையின் தலைவா் டாக்டா் பிரதாப் சி ரெட்டி கூறினாா்.

அப்பல்லோ சாா்பில் தேசிய அளவிலான செய்தியாளா் சந்திப்பு காணொலிக் காட்சி முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அப்பல்லோ துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, மருத்துவமனை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது பிரதாப் சி ரெட்டி கூறியது:

கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்கு தனி வாா்டு அமைத்து சிகிச்சையளிக்கவும், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக கரோனா சிகிச்சை வாா்டு தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், 500 படுக்கையுடன் கூடிய தனி வாா்டு ஏற்படுத்தப்படும்.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களில் கரோனா அறிகுறிகளுடன் இருந்தவா்களுக்கு, அவா்களைத் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துவதற்கான வசதிகளையும் செய்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT