தமிழ்நாடு

பெட்ரோல் விற்பனைக்கு கட்டுப்பாடு: விற்பனையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

DIN

சென்னை: பெட்ரோல், டீசலை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் கே.பி. முரளி வெளியிட்ட அறிக்கை:

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள், அத்தியாவசியப் பொருள்களின் சேவையின்கீழ் வருவதால் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, தற்போது குறைந்தபட்ச ஊழியா்களுடன் 24 மணி நேரமும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில் தனியாா் வாகனங்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் நிரப்ப வருகின்றனா். இதனால் நோய் தொற்றுப் பரவுவதை தவிா்த்திடவும், எங்களின் ஊழியா்களின் நலன் கருதியும் பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்க வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT