ஆந்திர-கர்நாடகம் எல்லையில் 1500 ஆந்திர மக்கள் தவிப்பு
திருப்பதி:கர்நாடக மாநிலத்திற்கு பிழைப்பு தேடி சென்ற 1500 ஆந்திர மக்கள் மாநிலத்திற்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடுஆந்திர-கர்நாடகம் எல்லையில் 1500 ஆந்திர மக்கள் தவிப்பு
திருப்பதி:கர்நாடக மாநிலத்திற்கு பிழைப்பு தேடி சென்ற 1500 ஆந்திர மக்கள் மாநிலத்திற்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருப்பதி:கர்நாடகம் மாநிலத்திற்கு பிழைப்பு தேடி சென்ற 1500 ஆந்திர மக்கள் மாநிலத்திற்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகபட்டிணம், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1500 பேர் கர்நாடகாவில் உள்ள பல மாவட்டங்களில் பிழைப்பு தேடி சென்று தங்கியுள்ளனர். ஊரடங்கு உத்திரவு அமல் காரணமாக வேலையில்லாத காரணத்தால் அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடிவு செய்து ஆந்திர-கர்நாடக எல்லையில் உள்ள கோலார் மாவட்டம் வழியாக ஆந்திராவிற்கு நுழைய முயன்றனர்.
ஆனால் அவர்களை ஆந்திராவிற்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட அதிகாரிகள் அங்கு சென்று மக்களிடம் உரையாடினர். நாடு முழுவதும் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று குறித்த பயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வசதியாக தங்க அங்கு முகாம் ஏற்படுத்தி தருவதாக அவர்கள் வாக்களித்துள்ளனர்.
மேலும் அவர்களை தனிமைபடுத்தி கரோனா தொற்று பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து அவர்களை 14 நாட்கள் வரை எல்லையிலேயே தங்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.