முகப்பு
தமிழ்நாடு

தாய்லாந்து நாட்டினருக்கு சிகிச்சை: ஈரோடு ரயில்வே மருத்துவமனை மூடல்

தாய்லாந்து நாட்டினருக்கு சிகிச்சை அளித்த ஈரோடு ரயில்வே மருத்துவமனை டாக்டர் மற்றும் பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் அந்த

தமிழ்நாடு

தாய்லாந்து நாட்டினருக்கு சிகிச்சை: ஈரோடு ரயில்வே மருத்துவமனை மூடல்

தாய்லாந்து நாட்டினருக்கு சிகிச்சை அளித்த ஈரோடு ரயில்வே மருத்துவமனை டாக்டர் மற்றும் பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் அந்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

ஈரோடு: தாய்லாந்து நாட்டினருக்கு சிகிச்சை அளித்த ஈரோடு ரயில்வே மருத்துவமனை டாக்டர் மற்றும் பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் அந்த மருத்துவமனை இன்று மூடப்பட்டது.

ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் 6 டாக்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இங்கு தினமும் 100 முதல் 120 பேர் வரை சிகிச்சை பெறுவார்கள். தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 5 பேரில் இருவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்ததாக போலீஸார் உறுதி செய்தனர். தவிர தாய்லாந்து நாட்டினருடன் நெருங்கிப் பழங்கிய சிலரும் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 

தாய்லாந்து நாட்டினர் இருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அண்மையில் அந்த மருத்துவமனை டாக்டர், பணியாளர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது பரிசோதனை முடிவு தெரியவில்லை. 

அந்த மருத்துவமனையில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை மூடப்பட்டது. வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திறக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த 15 நாட்களில் சிகிச்சை பெற்றவர்கள், வந்து சென்றவர்கள், இங்குள்ள டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் சென்று வந்த இடங்கள், அவர்களது குடும்பத்தார் என 200-க்கும் மேற்பட்டோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் முயற்சியில் போலீஸார், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது: தாய்லாந்து நபர் சிகிச்சைக்கு சென்றதாக வந்த தகவலின் அடிப்படையிலும் அங்குள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு சென்று வந்தவர்களும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் அவர்களது பரிசோதனை விவரம் தெரியவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் கிருமி நாசினி தெளித்து மருத்துவமனையை மூடி உள்ளோம்.  அங்கு சிகிச்சை பெற்றவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தி வருகிறோம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →