தமிழ்நாடு

ஊரடங்கைக் கடுமையாக பின்பற்றுக: முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி அறிவுரை

DIN


சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டார்.

அதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை பிரதமர் மோடியிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும், பிரதமர், மக்கள் நலன் கருதி, 144 தடை உத்தரவினைக் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 

அதற்கு, மேற்கூறிய அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT