சித்தூரில் ஊரடங்கை மீறிய 13 பேருக்கு சிறை தண்டனை
சித்தூரில் ஊரடங்கை மீறிய 13 பேருக்கு 2 நாட்கள் சிறை தண்டனை மற்றும் ரூ1000 அபராதம் விதித்து பீலேரு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
தமிழ்நாடுசித்தூரில் ஊரடங்கை மீறிய 13 பேருக்கு சிறை தண்டனை
சித்தூரில் ஊரடங்கை மீறிய 13 பேருக்கு 2 நாட்கள் சிறை தண்டனை மற்றும் ரூ1000 அபராதம் விதித்து பீலேரு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
சித்தூரில் ஊரடங்கை மீறிய 13 பேருக்கு 2 நாட்கள் சிறை தண்டனை மற்றும் ரூ1000 அபராதம் விதித்து பீலேரு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் வரும் ஏப்.14ம் தேதி வரை 144 தடை உத்திரவை பிறப்பித்துள்ளது. ஆனால் அதையும் மீறி பலர் வெளியில் திரிந்து வருகின்றனர்.
வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு பலமுறை அறிவித்தும் மக்கள் அதை கண்டு கொள்ளாமல் திரிந்து வந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் வெளியில் திரிந்து வந்த 13 பேர் மற்றும் ஒரு ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து பீலேரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களுக்கு 2 நாட்கள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ1000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்திரவிட்டனர்.