முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூரில்  பங்குனி உத்திர பூஜைகள் ரத்து

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப். 6-ம் தேதி வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 

இதே போல இத்திருக்கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலிலும் பங்குனி உத்திர பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் அனைத்தும் நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.