முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2,000க்கு மேல் அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து நாட்டினர் 5 பேர் கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை உட்பட பல இடங்களுக்கு சென்று வந்தனர். அவர்களை பிடித்து, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த ஈரோட்டை ஒருவருக்கும், தில்லி மசூதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வந்த ஈரோட்டை சேர்ந்த இருவர் என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 

அதேநேரம் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள 58 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன. அவற்றின் முடிவு தெரியவில்லை. இதனிடையே இவர்களுடன் தொடர்பில் இருந்த, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் 1,696 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஜானகியம்மாள் லேஅவுட் பகுதியில், 60 பேர், பூர்ணம்பிள்ளை தோட்டம் பகுதியில் 250, ரயில்வே காலனி பகுதியில் 200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர தாங்களாக முன்வந்தும், தகவல்களின் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தியும், சிகிச்சைக்கும் அனுமதித்துள்ளனர்.

புதிய தொற்று உள்ளோர் கண்டறியப்படவில்லை என்ற போதிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →