தமிழ்நாடு

ரேஷன் பொருட்களை வீடுகளில் சேர்க்க குழுக்கள் அமைப்பு

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளில் சேர்க்க ஒவ்வொரு கடைக்கும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

DIN

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளில் சேர்க்க ஒவ்வொரு கடைக்கும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கரோனா பரவலை தடுப்பதற்குச் சமூக விலகல் பின்பற்றப்பட வேண்டிய நிலை உள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் நிலைமைக்கு ஏற்றவாறு, நிவாரணத் தொகையையும், ரேஷன் பொருள்களையும் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்யலாம் என தமிழக முதல்வர் அண்மையில் ஆலோசனை வழங்கினார்.

அரசு அறிவித்த நிவாரணம் ஏப். 2-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. ரேஷன் கடையில் கரோனா பரவலை தவிர்ப்பதற்காகக் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணத் தொகையையும், ரேஷன் பொருட்களையும் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கடையிலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாநகரில் 68 ரேஷன் கடைகள் உள்ள நிலையில், ஒவ்வொரு கடைக்கும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கிராம நிர்வாக அலுவலர், மாநகராட்சி ஊழியர், அங்கன்வாடி பணியாளர், ரேஷன் கடை ஊழியர், வருவாய்த் துறை ஊழியர் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த 5 பேரின் பெயர் மற்றும் அவர்களின் செல்லிடப்பேசி எண் போன்றவை துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு, கடைகளில் சனிக்கிழமை ஒட்டப்பட்டன. மேலும், இந்த துண்டறிக்கைகளை அந்தந்த கடைக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பணியாளர்கள் சனிக்கிழமை வழங்கினர். 

இதன் மூலம், ஏப். 2-ம் தேதிக்கு பின்னர் பொதுமக்கள் செல்லிடப்பேசியில் அந்தந்த கடைக்குச் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறித்து கூறினால், வீடுகளில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதைக் கண்காணிக்க உயர் அலுவலர்கள் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மாவட்டத்தில் மொத்தம் 1,185 ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு தலா 5 பேர் வீதம் மொத்தம் 5,925 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

SCROLL FOR NEXT