திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் ரோபோ!
திருச்சியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் மனிதர்களைப்போல இயங்கும் ரோபோக்களை விற்பனைக்கு வைத்துள்ளது.
தமிழ்நாடுதிருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் ரோபோ!
திருச்சியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் மனிதர்களைப்போல இயங்கும் ரோபோக்களை விற்பனைக்கு வைத்துள்ளது.
திருச்சியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் மனிதர்களைப்போல இயங்கும் ரோபோக்களை விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த வகை ரோபோக்கள் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் சேவையை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது.
இந்த ரோபோக்களை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் மருந்து வழங்க பரிசோதனை முறையில் ஞாயிற்றுக்கிழமை செயல்படுத்தப்பட்டது. நான்கு ரோபோக்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த முறையில் மருந்து வழங்கும் போது நோய் தொற்று தவிர்க்க முடியும்.
இது பலன் அளித்தால் தொடர்ந்து கரோனா வார்டில் ரோபோக்கள் பயன்படுத்த உள்ளது. இது தொடர்பாக மென்பொருள் பொறியாளர் குருமூர்த்தி கூறியது: கரோனா வார்டில் மருந்து, திட உணவு, திரவ உணவு வழங்கும் பணியை ரோபோக்கள் மேற்கொள்ளும். சோதனை முயற்சி திருப்திகரமாக இருந்தது.
மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்கினால் ஓரிரு நாளில் திருச்சி அரசு மருத்துவமனயில் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.