தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் இல்லாத கிருத்திகை வழிபாடு 

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகி வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.

எம். ஞானவேல்

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகி வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசாமி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோயில் புனித தீர்த்தக் குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தால் 4448 வியாதிகள் தீரும் என்பது ஐதிகம் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மாதந்தோறும் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு கிருத்திகை வழிபாடு நடைபெறுவது வழக்கம். 

இவ்வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார். இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க மத்திய மாநில அரசு 21 நாட்கள் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டு நித்ய பூஜைகள் மட்டும் நடைபெறுகிறது. 

இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிருத்திகை வழிபாட்டில் பக்தர்கள் யாரும் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் உலக மக்களைக் கொரோனா தொற்று நோயிலிருந்து காக்க சிறப்பு வழிபாடு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT