தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே மைதா ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

DIN

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மைதா ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

திண்டுக்கல்லில் இருந்து மைதா மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரிக்கு லாரி ஒன்றுசென்று கொண்டிருந்தது. அந்த லாரி, பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது.

இதில், லாரி மற்றும் லாரியில் இருந்த மைதா மூட்டைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில், சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மைதா மூட்டைகள் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து, லாரி ஓட்டுநர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT