தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கரோனா; சென்னையில் மட்டும் 176, பாதிப்பு 2,526 ஆக உயர்வு

DIN


தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு  2,526 ஆக அதிகரித்துள்ளது.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 1,082 ஆனது. சென்னையில் இன்று மட்டும் 3,200 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 54. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,312. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8, திருவள்ளூரில் 6, மதுரையில் 3, காஞ்சிபுரம், தஞ்சாவூரில் தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பாதிப்பு 200 ஐத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பாதிப்பு: 2,526

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 28

குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,312

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT