கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறியது.
தூத்துக்குடியில் கரோனா வைரஸ் தொற்றால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த பசுவந்தனையை சேர்ந்த வேலம்மாள் சிகிச்சை நிறைவடைந்து குணமாகி இன்று வீடு திரும்பினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி கரோனா தொற்றால் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவர்கள் உள்ளிட்டோர் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, ஈரோட்டைத் தொடர்ந்து தூத்துக்குடி கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. முன்னதாக கிருஷ்ணகிரி, கரோனா பாதிக்கப்படாத மாவட்டமாக உள்ளது.
தூத்துக்குடியில் இதுவரை 2,364 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.