தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது!
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதுமே ஊரடங்கு அமல் காரணமாக அனைத்து துறை சார்ந்த தொழில்களும் முடங்கியுள்ளன. அரசுக்கும் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசின் வருவாயை அதிகரிக்கும் சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி 28% லிருந்து 34% ஆகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 20% லிருந்து 25% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 -ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 -ம் உயரும் எனத் தெரிகிறது.