தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

DIN


தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி:

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 527 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 12,773 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 527 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 377 பேர் ஆண்கள், 150 பேர் பெண்கள். 

இன்று 30 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஒருவர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 50 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் (அரசு - 36, தனியார் - 14) உள்ளன.

தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை:

மொத்தம் பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகள்: 1,62,970

மொத்தம் பரிசோதிக்கப்பட்டுள்ள நபர்கள்: 1,53,489

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT