டாஸ்மாக் திறப்பு ஏன்? தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான காரணம் குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான காரணம் குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு இன்று (திங்கள்கிழமை) மாலை அறிவிப்பொன்றை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கான காரணத்தையும் அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் விளக்கம்:
"தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இவற்றைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.