தமிழ்நாடு

இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார்.

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று இரண்டாவது நாளாக நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழக முதல்வரின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

எனினும், கரோனா தொற்று நோயைத் தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களிடையே முதல்வர் உரையாற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில்  266 பேருக்கும், கடலூரில்122 பேருக்கும் நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தையில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவியதே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வாயிலாக சமூகத்தில் கரோனா தொற்று பரவுவது தொடர்ந்தே வருகிறது. அதிலும், கடந்த ஒரு வாரமாக அதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கிறது. 

குறிப்பாக, கோயம்பேடு சந்தையில், காய்கறி, மலர், பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும், கூலி தொழிலாளர்களுக்கும் அண்மையில் நோய்த்தொற்று ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு பரவியது. சென்னை மட்டுமன்றி கடலூர், விழுப்புரம், அரியலூர் என தமிழகம் முழுவதிலும் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்றவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது. மாநிலம் முழுவதும் மொத்தம் 3,550 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT