குடிபோதையில் பாம்பை கடித்து குதறி கழுத்தில் போட்டுக் கொண்டு மதுபாட்டீலுடன் இருசக்கர வாகனத்தை ஒட்டும் வாலிபர். 
தமிழ்நாடு

குடிபோதையில் பாம்பை கடித்துக் குதறிய வாலிபர்

ஆந்திர எல்லையில் குடிபோதையில் பாம்பை கடித்துக் குதறி கழுத்தில் போட்டுக் கொண்டு வாலிபர் ஒருவர் மது குடித்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

DIN


ஆந்திர எல்லையில் குடிபோதையில் பாம்பை கடித்துக் குதறி கழுத்தில் போட்டுக் கொண்டு வாலிபர் ஒருவர் மது குடித்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திராவில் திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. குடிமகன்கள் பலர் சமூக இடைவெளியை கூட பின்பற்றாமல் பல மணிநேரம் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். இதனால் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்றப்பட்ட தகராறில் 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். 

இந்நிலையில் திறக்கப்பட்ட மதுக்கடைகளால் பலரின் சூழ்நிலைகள் மாறினாலும், ஆந்திர-கர்நாடக எல்லையில் 43 நாட்களுக்கு பின் ஒரு வாலிப குடிமகன் புதன்கிழமை மதுவை வாங்கி குடிக்கச் சென்று கொண்டிருந்தபோது வழியில் எதிர்பட்ட ஒரு பாம்பை பார்த்தார். மது கிடைக்காத 40 நாட்கள் கோபத்தை அந்த பாம்பை எடுத்துக் கடித்து அதன் மீது தீர்த்துக் கொண்டார்.

பின்னர் அந்த பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு மதுபாட்டிலை கையில் வைத்து குடித்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டினார். மதுபோதையால் கடந்த பல நாட்களாக பார்க்காத சம்பவங்களை தற்போது கிராமங்கள் சந்தித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT