முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் மதுக்கடைகள்: காத்திருக்கும் காட்சிகள்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக 40 நாள்களுக்கு மேலாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:


கரோனா பொதுமுடக்கம் காரணமாக 40 நாள்களுக்கு மேலாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில், வியாழக்கிழமை முதல் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி, சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மது வாங்க ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கும் மதுப்பிரியர்களின் காட்சிகளை இங்கே காணலாம். 

சேலம் பால் மார்க்கெட் பகுதியில் கடை திறக்கும் முன்பே காத்திருக்கும் குடிமகன்.

அம்பாசமுத்திரத்தில் மது வாங்க டோக்கன் வாங்குவதற்கான வரிசையில் காத்திருந்த 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் மது பாட்டில் வாங்க டாஸ்மாக் கடை முன்பு வியாழக்கிழமை நீண்ட வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி காத்திருக்கும் மது அருந்துவோர். 

சேலம் டவுன் ரயில் நிலையம் முன்பு டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில் வாங்க காத்திருக்கும் மது அருந்துவோர்.

ஆத்தூர் பெரியார் சிலை அருகில் திராவிட கழகம் மாவட்ட தலைவர் வானவில் தலைமையில் மதிமுக மாவட்டச் செயலாளர் கோபால்ராஜ், மனித உரிமை குடிமக்கள் இயக்கம் மாவட்ட அமைப்பாளர் ராமு ஆகியோர் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் பாபநாசம் சாலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் தலைமையில் திரண்டவர்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →