தமிழ்நாடு

திருமழிசையில் மே 10 முதல் காய்கறிச் சந்தை துவக்கம்: சிஎம்டிஏ

சென்னை திருமழிசையில் வரும் 10 ஆம் தேதி முதல் காய்கறிச் சந்தை செயல்படத் துவங்கும் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. 

DIN

சென்னை திருமழிசையில் வரும் 10 ஆம் தேதி முதல் காய்கறிச் சந்தை செயல்படத் துவங்கும் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கானோருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்படுவதாக சிஎம்டிஏ  தெரிவித்தது. அதன்படி, திருமழிசையில் சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தொடா்ந்து மே 10 ஆம் தேதி முதல் காய்கறிச் சந்தை செயல்படத் துவங்கும் என சிஎம்டிஏ உறுதிப்படத் தெரிவித்துள்ளது. மேலும், வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. 

மேலும், திருமழிசை காய்கறிச் சந்தையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிஎம்டிஏ அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

முதல்முறையாக Space Needle கோபுரத்தில்பறந்த இந்திய தேசியக் கொடி! | US

SCROLL FOR NEXT