தமிழ்நாடு

மே 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

DIN

கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வருகிற 13 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவிருக்கிறார். 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், வருகிற மே 17 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி  காணொலிக் காட்சி வாயிலாக மே 13 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அந்தந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்வார் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT