தமிழ்நாடு

ஆன்-லைன் மூலம் மது விற்க தடை கோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

DIN

ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்ய தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை வரும் மே 14-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதது.

தமிழகத்தில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்குரைஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் மது விற்பனைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

ஆனால் நிபந்தனைகள் பின்பற்றாததால், திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆன்லைன் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கின்
முடிவை பொருத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை வரும் மே14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT