தமிழ்நாடு

சங்ககிரி அருகே 520 கூலித்தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் உணவுப்பொருள்கள் வழங்கல் 

DIN

அதிமுக சார்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 520 கூலித்தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பொருள்கள்  வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றன. 

கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மே 17ம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளன. அதனையடுத்து கூலித்தொழிலாளர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளடங்கி உள்ளனர். 

இதனையடுத்து அதிமுக சார்பில் சமூக இடைவெளிக்காக மோரூர் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் தெரு, புள்ளிப்பாளையம் அருந்ததியர் தெரு ஆகிய இரு பகுதிகளில் உள்ள 520 கூலித்தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தலா 25 கிலோ அரிசி மூட்டைகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலர் கே.வெங்கடாஜலம் தலைமை வகித்து வழங்கினார். 

சங்ககிரி ஒன்றியச் செயலர் என்சிஆர். ரத்தினம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம், மோரூர் கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் சரஸ்வதி, ஊராட்சி செயலர் சேகர், நிர்வாகிகள் வினோத், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT