தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மட்டும் புதிதாக 716 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 427 பேர் ஆண்கள், 288 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர இன்று மட்டும் 83 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,134 ஆக உள்ளது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 6,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 11,632 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,55,584 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக பாதிப்புக்குள்ளானோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 510 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT