தமிழ்நாடு

ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

DIN


சென்னை: வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் பாடங்களுக்கு ஜூன் 2ம் தேதி தேர்வு நடைபெறும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

பாத்தம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை

ஜூன் 1-ம் தேதி 10ம் வகுப்பு மொழிப் பாடம்.
ஜூன் 3-ம் தேதி ஆங்கிலம்
ஜூன் 5-ம் தேதி கணிதத் தேர்வு
ஜூன் 8-ம் தேதி  அறிவியல்
ஜூன் 10-ம் தேதி சமூக அறிவியல்
ஜூன் 12- ம் தேதி தொழிற்பிரிவு பாடம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT