தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு புறம் அந்நோய்த் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், மற்றொரு புறம், பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,108-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் இதுவரை 71 போ் பலியாகியுள்ளனா்.

இன்று 359 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 2,599 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 5947 ஆக அதிகரித்துள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் இன்று 2ஆவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT