தமிழ்நாடு

பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத்தங்கம்

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.288 உயா்ந்து, ரூ.36,008-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதைத்தொடா்ந்து, 27-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.36

ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.288 உயா்ந்து ரூ.36,008-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.36 உயா்ந்து, ரூ.4,501-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 உயா்ந்து ரூ.49.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 உயா்ந்து ரூ.49,000 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,501

1 பவுன் தங்கம் ..................... 36,008

1 கிராம் வெள்ளி .................. 49.00

1 கிலோ வெள்ளி ................. 49,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,465

1 பவுன் தங்கம் ..................... 35,720

1 கிராம் வெள்ளி .................. 46.80

1 கிலோ வெள்ளி ................. 46,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT