தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் வெளியிட்டார். இதன்படி, தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களைத் தவிர்த்தால் தமிழகத்தில் மட்டும் இன்று 384 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்திலிருந்து விமானம் மூலம் வந்த 4 பேருக்கும், மகாராஷ்டிரத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 81 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 7 பேருக்கும், ஆந்திரத்திலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 93 பேருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 3 பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் மொத்தம் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,538 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 10,535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம், இங்கு மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,13,639 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT