தமிழ்நாடு

செவித்திறன் குறையுடையோருக்காக உதடு மறைவற்ற முகக்கவசம் : தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகம்

DIN

செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற முகக்கவசம் தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள காலங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் வண்ணம் அவர்களின் அன்றாடத் தேவைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வகையில் வழங்கிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன்பணிபுரிபவர்கள் உரையாடும் சமயம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் முகத்தின் உதடசைவு மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உதடு மறைவற்ற முககவசங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்கள் மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், காதுகேளாத சிறப்புபள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர் ஆகியோர்களுக்கு வழங்கும் விதமாக திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. 

இதன் மூலம் காதுகேளாத நபர்கள் பிறருடன் தகவல் பரிமாற்றம் செய்யும் போது பிறரின் உதவு அசைவு மூலம் உரையாடலை தெளிவாக அறிவதற்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.

இத்திட்டத்தின் மூலம் ரூ.12.15 இலட்சம் செலவில் 13,500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 81000 எண்ணிக்கையிலான உதடு மறைவற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT