தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை: நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

DIN

வள்ளியூர்: புயல் எச்சரிக்கை காரணமாக, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

தென்வங்கக் கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குநர் விஜயராகவன் அறிவித்திருந்தார். இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராம மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை. தங்களது வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களில் சீரமைப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள், கடந்த ஒருவாரமாகத்தான் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுவந்தனர். இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மீண்டும் மீன்பிடிக்க செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT