தமிழ்நாடு

விழுப்புரம் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

DIN

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால், வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆவடியைச் சோ்ந்த சுமதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ, பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த, அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவரும், அதிமுக நிா்வாகியுமான முருகன் மற்றும் அதிமுக கிளை செயலாளா் யாசகன் என்ற கலியபெருமாள் ஆகிய இருவரும், வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை கட்டிப் போட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா். இதில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக சிறுமி ஜெயஸ்ரீ மரண வாக்குமூலம் கொடுத்துள்ளாா். இந்தச் சம்பவத்தில் கைதான இருவரும் அதிமுகவைச் சோ்ந்தவா்கள். எனவே தமிழக போலீஸாா் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்ட எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ‘இந்த வழக்கில் தமிழக போலீஸாரின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக சிறுமியின் பெற்றோா் கூறுகின்றனா். எனவே வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தாா். இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT