முகப்பு
தமிழ்நாடு

காரைக்குடியில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிய நீதிபதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் காரைக்குடி வழக்குரைஞர்கள் சங்கம்

Updated On : 21 மே, 2020 at 4:06 PM
பகிர்:

காரைக்குடியில் ஏழை, எளியவர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை காரைக்குடி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ். பாலமுருகன் வழங்கினார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் காரைக்குடி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பொது முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் 200 பேருக்கு தலா ரூ.700 மதிப்பிலான மளிகைப் பொருள்களை நீதிமன்றம் முன்பாக  காரைக்குடி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ். பாலமுருகன் வியாழக்கிழமை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் உரிமையியல் கூடுதல் நீதிபதி நர்மதா, விரைவு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், வட்டாட்சியர் பாலாஜி, மத்திய அரசு வழக்குரைஞர் சண்முகராஜா, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சண்முக சேகர், செயலாளர் ராமநாதன், பொருளாளர் சங்கீதா, வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் சித்ரா, தன்னார்வலர் நல்லமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.